தூத்துக்குடியில் டிரைவர் கொலையில் ஒருவர் சிக்கினார்

தூத்துக்குடி ஆரம்ப சுகாதார நிலைய டிரைவர் கொலையில் ஒருவர் சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி தபால் தந்தி காலனியை சேர்ந்தவர் ரத்தினசாமி(வயது 38). இவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார்.

இவர் நேற்று தூத்துக்குடி-ராஜபாளையம் கடற்கரை பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு ரத்தக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுதொடர்பாக தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரத்தினசாமியை கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது கொலை செய்யப்பட்டுள்ள ரத்தினசாமி மீது அவரது மனைவி கொடுத்த புகாரின்பேரில் சிப்காட் போலீசில் ஒரு வழக்கு உள்ளது. அந்த பிரச்சினை தொடர்பான முன்விரோதத்தில் யாரேனும் அவரை கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் முன்விரோதமா என்று விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 2 பேரை தேடி  ஒரு தனிப்படை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு விரைந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com