

சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தமிழக அரசு அறிவித்துள்ள தேசிய குடற்புழு நீக்க வாரத்தையொட்டி குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணி தொடங்கப்பட்டது.
23 அங்கன்வாடி மையத்திலும், 28 பள்ளிகளிலும் மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது. இப்பணியில் சுகாதார ஆய்வாளர்கள் ஜேசுராஜ், மகேஷ்குமார் தலைமையில் மருத்துவ பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள், டெங்கு மஸ்தூர் பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டு கடந்த 4 நாட்களாக மாத்திரை வழங்கி வருகின்றனர்.
இம்மாத்திரையை விடுபட்டவர்கள் சுகாதாரத்துறையினரை அணுகி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது