பேய்குளத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்

பேய்குளம் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
பேய்குளம் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
பேய்குளம் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
Published on

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் அரசு நடுநிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் உலக பூமி தினம் முகாம் பள்ளி தலைமையாசிரியர் இம்மானுவேல் தலைமையில் நடந்தது.

 இதில் பூமி தினம் குறித்து சிகரம் அறக்கட்டளை தலைவர் முருகன் பேசினார்.

சட்டம் குறித்து சாத்தான்குளம் வழக்கறிஞர் வேணுகோபால் பேசினார்.

 வட்ட சட்டப்பணிக்குழு நிர்வாகி மகேந்திரன் வரவேற்றார். இதில் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரிய, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியர் சுவாமிதாஸ் நன்றி கூறினார்.

இதற்கான ஏற்பாடுகளை சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற சட்ட வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் உரிமையியல் நீதிபதி ரமேஷ் மற்றும் சட்டப்பணி குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com