நாசரேத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

நாசரேத் பஜார் மற்றும் வாரச்சந்தையில் முகக்கவசம் அணியாமல் நின்றவர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் தலைமையிலான பணியாளர்கள் ரூ.200 அபராதம் விதித்தனர்.
பேரூராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்த காட்சி.
பேரூராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்த காட்சி.
Published on

நாசரேத்:

நாசரேத் பஜார் மற்றும்  வாரச்சந்தையில் பேரூராட்சி செயல் அலுவலர் பால்ராஜ்  தலைமையில் பணியாளர்கள் மற்றும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். 

அப்போது சந்தையில் முககவசம் அணியாமல் கொரோனா பரவும் வகையில் வந்த பொதுமக்கள் மற்றும்  வியாபாரிகளுக்கு தலா ரூ .200 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் அனைவரும் 2-ம் தவணை தடுப்பூசி வரை போட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.  

சந்தை  வியாபாரிகள் கண்டிப்பாக அடுத்த வாரம் 2-ம் தவணை தடுப்பூசி  போட்டு அதற்கான சான்றிதழை வைத்திருந்தால் மட்டுமே சந்தையில் கடை நடத்திட அனுமதிக்கப்படும்  என  பேரூராட்சி செயல் அலுவலர் பால்ராஜ் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com