உடன்குடியில் குடிநீர், தெருவிளக்கு பணிகளுக்கு முன்னுரிமை-பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்

உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சி கவுன்சிலர்களின் முதல் கூட்டம் நடைபெற்றது. இதில் குடிநீர், தெருவிளக்கு பணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உடன்குடி பேரூராட்சி கூட்டத்தில் செயல் அலுவலர் பாபு பேசிய காட்சி.
உடன்குடி பேரூராட்சி கூட்டத்தில் செயல் அலுவலர் பாபு பேசிய காட்சி.
Published on

உடன்குடி:

உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சி கவுன்சிலர்களின் முதல் கூட்டம் கூட்ட அரங்கில் நடந்தது. தலைவர் ஹீமை ரா அஸ்ஸாப் கல்லாசி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மால் ராஜேஷ், செயல் அலுவலர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் சித்தி சபீனா, பாலாஜி, மும்தாஜ் பேகம், பஷீர், பிரதீப் கண்ணன், முத்து சந்திரா, அன்பு ராணி, உமா, ஜாண் பாஸ்கர், ராஜேந்திரன், சரஸ்வதி, அஸ்ஸாப் அலி, சாரதா, முகமது ஆபித், ஹமிதா சபானா, சரஸ்வதி பங்காளன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் தலைவர் ஹீமைரா அஸ்ஸாப் கல்லாசி நிருபர்களிடம் கூறுகையில், என் மீது நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பினை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உடன்குடி வளர்ச்சிக்கு நேர்மையாக, லஞ்சம் இல்லாத நிர்வாகம் நடக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்தார்.

உடன்குடி வளர்ந்து வரும் தொழில் நகரம் எனவே கவுன்சிலர்களின் முதல் கூட்டத்தில் மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர், தெரு விளக்கு, ரோடு போன்ற அடிப்படையான தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து திட்டப் பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாக அதிகாரி பாபு தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com