கந்துவட்டி சட்டத்தை திருத்த வலியுறுத்தி காங்கிரஸ் பிரமுகர் நூதன ஆர்ப்பாட்டம்

கந்துவட்டி சட்டத்தை திருத்த வலியுறுத்தி காங்கிரஸ் பிரமுகர் கோவில்பேட்டியில் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் பிரமுகர்.
நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் பிரமுகர்.
Published on

கோவில்பட்டி:

தமிழகம் முழுவதும் கந்துவட்டி குறித்த புகார்களை விசாரிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வை யில் அவரது அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விசாரணை செய்ய வேண்டும், கந்துவட்டி சம்பந்தப்பட்ட வழக்குகளை சிறப்பு நீதிமன்றம் மூலம் ஓராண்டிற்குள் தீர்ப்பு வழங்க வேண்டும், கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்,

கந்துவட்டி சட்டத்தை திருத்த வேண்டும், கந்துவட்டியை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் வழக்கறிஞர் அய்யலுசாமி தனது கழுத்தில் வங்கி காசோலைகளை மாலையாக அணிந்து, கையில் அக்னி சட்டி ஏந்தியவாறு கோஷமிட்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் கோரிக்கை மனுவை  உதவி கலெக்டர் சங்கரநாராயணனிடம் அளித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com