படுக்கப்பத்தில் கிரிக்கெட் போட்டிகள்- வெற்றி பெற்ற முதல் அணிக்கு ரூ.10 ஆயிரம் பரிசு

படுக்கப்பத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது16 அணிகள் போட்டியில் கலந்துகொண்டு விளையாடின.
 முதல் பரிசு பெற்ற அணிக்கு பரிசு கேடயம் வழங்கப்பட்டது.
 முதல் பரிசு பெற்ற அணிக்கு பரிசு கேடயம் வழங்கப்பட்டது.
Published on

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் ஒன்றியம் படுக்கப்பத்து சன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டிகள் நடந்தன. மாவட்டத்தின் பல்வேறு தரப்பிலிருந்து 16 அணிகள் போட்டியில் கலந்துகொண்டு விளையாடின.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் முதல் பரிசு பெற்ற அணிக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ் சார்பில் வழங்கப்பட்ட ரூ.10 ஆயிரத்தை சாத்தான்குளம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் லூர்துமணி வழங்கினார். பரிசுகள் கோப்பைகளும் வழங்கப்பட்டன.

இதில் கலந்து கொண்ட அனைத்து அணிகளுக்கும் ஊக்கப் பரிசுகள் வழங்கப் பட்டன.

நிகழ்ச்சியில் படுக்கப் பத்து பஞ்சாயத்து தலைவர் தனலட்சுமி சரவணன், தொழிலதிபர் ராமநாதன் ஆதித்தன், கிராம நிர்வாக அலுவலர் சத்யராஜ் உள்பட ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com