தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் 100 பேருக்கு கொரோனா பரிசோதனை

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து எஸ்.பி. அலுவலகத்தில் பணியாற்றிய 100 பேருக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

 நேற்று மேலும் 323  பேருக்கு தொற்று உறுதியானது. அதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரும் ஒருவர். இதனால் அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.  

இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் உள்பட 100 பேருக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

மேலும் அலுவலக வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.  மாநகராட்சி சார்பில் மாநகர பகுதியில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

இதேபோல் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் மாலை தெரிய வரும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com