

உடன்குடி:
உடன்குடி மெயின் பஜார் 4 சந்திப்பு பகுதியில் திங்கட்கிழமை தோறும் செயல்படும் வாரச்சந்தை வளாகம் உள்ளது. இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட சிறு மற்றும் பெரும் வியாபாரிகள் வருவார்கள்.
காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை சுற்றுப்புற பகுதியில் இருந்து சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து தங்களது வீடுகளுக்கும், தங்களது கிராமங்களில் உள்ள கடைகளுக்கும் தேவையான பொருட்களை வாங்கிச் செல்வார்கள்.
நேற்று வார சந்தையில் கத்தரிக்காய், தக்காளி, பல்லாரி ஆகியன ஒரு கிலோ ரூ.20 க்கும், சின்ன வெங்காயம், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், சவ்சவ் ஆகியன ஒரு கிலோ ரூ.25-க்கும், பாகற்காய் வெண்டைக்காய், ஆகியன கிலோ ரூ.40-க்கும் மிளகாய், இஞ்சி, அவரைகாய், கரட் ஆகியன கிலோ ரூ.60-க்கும் பீன்ஸ், பூடு ஆகியன கிலோ ரூ.100-க்கும் விற்றது.
இதுபற்றி வாரச்சந்தை வியாபாரி ஒருவர் கூறியதாவது, காய்கறிகளின் விலைகள் மிகவும் குறைவாகத்தான் உள்ளது.
ஏற்று கூலி, இறக்கு கூலி, வாகன வாடகை என கணக்கிட்டு பார்த்தால் விவசாயிகளுக்கு இந்த விலை கட்டுப்படி ஆகாது. தற்போது சைவ பொருட்கள் எல்லாமே விலை குறைவாகத்தான் உள்ளது என்று கூறினார்.