சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரியில் சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம்

சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட அணிகள் சார்பில் சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்ட காட்சி.
மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்ட காட்சி.
Published on

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட அணிகள் சார்பில் சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் சின்னத்தாய் தலைமை தாங்கி பேசினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலரும், தமிழ்த்துறை உதவிப் பேராசிரியருமான  உமாபாரதி வரவேற்று பேசினார்.

டி.எஸ்.பி. ராஜூ போதைப் பொருள் பயன்படுத்துவதினால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்துப் பேசினார். சப்-இன்ஸ்ெபக்டர் எபநேசர்,  மாணவர்கள் கைப்பேசியைத் தவறான முறையால் கையாளுவதன் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்துப் பேசினார்.

 நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவிப்பேராசிரியர் உமாபாரதி,  உதவிப்பேராசிரியர் வளர்மதி ஆகியோர் செய்திருந்தனர்.

 நாட்டு நலப்பணித்திட்ட மாணவி பெனிட்டா நன்றி கூறினார். சாதி, மத வேறுபாடற்ற சமூகத்தை உருவாக்குவோம் என்ற உறுதிமொழியினை  கல்லூரி முதல்வர் தலைமையில் மாணவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com