தூத்துக்குடியில் சூதாடிய 6 பேர் கைது

தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் உப்பாற்று ஓடை அருகே உள்ள எடைநிலையம் பின்புறம் பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

முள்ளக்காடு:

தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் உப்பாற்று ஓடை அருகே உள்ள எடைநிலையம் பின்புறம் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக முத்தையாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை சுற்றிவளைத்தனர்.

விளையாட்டில் ஈடுபட்ட தங்கம்மாள்புரத்தை சேர்ந்த முருகேசன்(வயது 60), பொன்னாண்டிநகர் மாரிச்செல்வம்(47), வரதவிநாயகர் கோவில் தெரு முருகன்(45), அய்யாசாமி(49), தோப்புத்தெரு சாமிதுரை(53), வடக்குத்தெரு சின்னத்தம்பி(71) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com