ஆறுமுகநேரியில் டிரைவரிடம் வழிப்பறி- 3 பேர் கைது

ஆறுமுகநேரியில் அரிவாளை காட்டி டிரைவரிடம் வழிப்பறி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி பாரதி நகரை சேர்ந்த டிரைவர் மாணிக்கம் (26) என்பவர் நேற்று முன்தினம் இரவு திருச்செந்தூரில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் ஆறுமுகநேரி வந்துள்ளார்.

அப்போது பாரதி நகரைச் சேர்ந்த பாம்பே முருகன் (40), ஜெபராஜ் (28), சதீஷ் (24) ஆகியோர் வழிமறித்து உள்ளனர். அவர்கள் மாணிக்கத்திடம் அரிவாளை காட்டி பணம் கேட்டுள்ளனர். அவர் சட்டைப்பையில் வைத்திருந்த ரூ.1,200- ஐ பறித்து கொண்டு, நீ போலீசில் புகார் செய்தால் உன்னை வீடு தேடி வந்து கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி உள்ளனர்.

இச்சம்பவம் பற்றி ஆறுமுகநேரி போலீசார் வழக்கு பதிந்தனர். இதில் தொடர்புடைய பாம்பே முருகன், ஜெபராஜ், சதீஷ் ஆகிய 3 பேரையும் இன்ஸ்பெ க்டர் செந்தில் கைது  செய்த னர்.கைதான பாம்பே முருகன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 வழக்குகள் உள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com