

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக்கொள்ளப்பட்டதால், திங்கட்கிழமை தோறும் நடை பெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 7-ந்தேதி முதல் வழக்கம்போல் நடை பெறும்.
அதனால் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்த மனுக்களை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளித்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.