வெள்ளையத்தேவன் முழுஉருவ வெண்கல சிலை வல்லநாடு கொண்டு வரப்பட்டது

சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் முழுஉருவ வெண்கல சிலை சென்னையில் இருந்து வல்லநாடு வந்தது.
வல்லநாடு மணிமண்டபத்தில் சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் வெண்கல சிலை நிறுவப்பட்ட காட்சி.
வல்லநாடு மணிமண்டபத்தில் சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் வெண்கல சிலை நிறுவப்பட்ட காட்சி.
Published on

செய்துங்கநல்லூர்:

வீரபாண்டிய கட்ட பொம்மனிடம் தளபதியாக இருந்தவர் சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன்.  தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் இவரது நினைவு மணிமண்டபம் உள்ளது.  இந்த மண்டபத்தில் வெள்ளையத் தேவனின் மார்பளவு வெண்கலச் சிலை அமைந்துள்ளது.

இந்த சிலைக்கு வருடம் தோறும் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வல்லநாடு பகுதியை சேர்ந்த பொதுமக்களும், வெள்ளையத் தேவனின் வாரிசுகளும் இந்த சிலைக்கு பதிலாக வெள்ளையத் தேவனின் முழு உருவ சிலையை வெண்கலத்தில் நிறுவ வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் வெள்ளையத் தேவனுக்கு வெண்கல சிலை அமைக்கப்படும்  என  முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்தார். இதைத் தொடர்ந்து மணிமண்டபத்தில் சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் பெரிய மீசையோடு, வாளுடன் குதிரை மீது அமர்ந்து வரும்படியான சிலை ரூ. 39.75 லட்சம் மதிப்பில் அமைக்கும் பணி சென்னையில் நடந்து வந்தது.

இதைத்தொடர்ந்து   சென்னையில் இருந்து இந்த முழு வெண்கல சிலை கொண்டு வரப்பட்டது. இன்று காலை வல்லநாட்டிற்கு கொண்டு வரப்பட்ட இந்த சிலைக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் வாரிசுதாரர்கள் மலர் தூவியும், மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். பின்னர் மணி மண்டபத்தில் வெண்கல சிலை நிறுவப் பட்டது.

விரைவில் இந்த சிலையை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com