

உடன்குடி:
உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவில் தென் மாவட்டங் களில் மிகவும் புகழ்பெற்ற கோவிலாகும். இங்கு நடைபெறும் தசரா பெரும் திருவிழா தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் திருவிழா வாகும்.
லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி சூரசம் ஹாரம் நடைபெறும் குலசேகரன் பட்டினம் கடற்கரையில் ரூ. 4.5 கோடியில் மத்திய-மாநில அரசின் சுற்றுலாத்துறை மூலம் அனைத்து தரப்பு மக்களும் வயது வித்தியாசம் இல்லாமல் கடற்கரையில் அமர்ந்து கடல் அழகை ரசிக்க நவீன பூங்கா உருவாக்கப்பட்டது.
சிறுவர்- சிறுமியர் விளையாட்டரங்கம், குடிநீர், கழிப்பிடம், வாகன நிறுத்துமிடம், தகவல் மையம், இப்படிபல்வேறு சிறப்பு அம்சங்களுடன் புதிய வடிவமைப்பில் நவீன பூங்கா அமைக்கப்பட்டு, அனைத்து பணிகளும் முழுமையாக முடிந்து விட்டது.
சுமார் ஒரு வருடமாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடாமல் முடக்கி வைக் கப்பட்டுள்ளது. இதனால் நவீன பூங்கா நாளுக்கு நாள் களை இழந்து வருகிறது.
இதை உடனடியாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.