கோவில்பட்டியில் புல்வாமா தாக்குல் 3-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

புல்வாமா தாக்குதல் 3-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் உருவப்படங்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட காட்சி.
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் உருவப்படங்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட காட்சி.
Published on

கோவில்பட்டி:

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற தாக்குதலில் தமிழக வீரர்கள் சிவசந்திரன், சுப்பிரமணியன் உள்பட 44 பேர் வீர மரணம் அடைந்தனர். 

அந்த வீரர்களின் 3 ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும்
அனுசரிக்கப்பட்டது.

 இந்நிலையில் கோவில்பட்டியில் காமராஜர் சிலை அருகே புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் கோவில்பட்டி டி.எஸ்.பி. உதயசூரியன் கலந்து கொண்டு வீரமரணம் அடைந்த வீரர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். 

தொடர்ந்து ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், தலைவர் ஜெயக்கொடி, ஆசிரியர்கள் ஜீவானந்தம், சக்திவேல், அசோக்குமார், பிரபாகரன், மாரிமுத்து, செல்வம், முருகன், கார்த்திகேயன், பாலமுருகன், நடராஜன், முனியசாமி, கிலாரி, மருது செண்பகராஜ், சந்திர கண்ணன், ரியல் பேமிலி பவுண்டேஷன் டாக்டர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு ராணுவ வீரர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com