ஸ்ரீவைகுண்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

மேலூர் சிறுமி கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய ஸ்ரீவைகுண்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தபோது எடுத்தபடம்.
கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தபோது எடுத்தபடம்.
Published on

செய்துங்கநல்லூர்:

மதுரை மேலூர் சிறுமி கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டம் பழைய தாலுகா அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு சீர்மரபினர் உரிமை மீட்பு இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹரிகரன் தலைமை தாங்கினார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் சீனிபாண்டியன், மாநில இளைஞரணி செயலாளர் வெள்ள முருகன், பா.ஜ.க. மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்ட செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். இதில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாவட்ட பொருளாளர் துரை சரவணன், சுடலை, சுடலைமணி, சின்னம்மா பேரவை ஒன்றிய அவைத்தலைவர் முத்து ராமலிங்கம், தென்னிந் திய பார்வர்ட் பிளாக் சந்தான கிருஷ்ணன், சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com