ரம்ஜான் மாதத்தில் ஏழை மக்களுக்கு பித்ரா அரிசி- முஸ்லிம் லீக் கூட்டத்தில் தீர்மானம்

ரம்ஜான் மாதத்தில் வழக்கம் போல ஏழை பொதுமக்களுக்கு பித்ரா அரிசி வழங்கப்படும் என காயல்கபட்டினம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
Published on

ஆறுமுகநேரி:

தூத்துக்குடி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் கூட்டம் காயல்பட்டினம் அருகே உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மீராசா மரைக்காயர் தலைமை தாங்கினார். 

ஏரல் நகரத் தலைவர் சாகுல்ஹமீது ஆலிம் இறைவணக்கம் பாடினார். மாவட்ட செயலாளர் மஹ்மூதுல் ஹசன் வரவேற்று பேசினார். மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

மாநில பொதுச் செயலாளர் முகம்மது அபூபக்கர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.தங்கத்தம்பி காதிர் சாகிபு, சுஹைல், சலாகுத்தீன், இம்ரான், கபீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காயல்பட்டினம் நகராட்சியில் குளறுபடியாக உள்ள வார்டு மறுவரையறை செய்ய அரசை கேட்டுக் கொண்டும், வரும் ரம்ஜான் மாதத்தில் வழக்கம்போல் ஏழை மக்களுக்கு பித்ரா அரிசி வழங்குவது என்றும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 மாவட்ட பொருளாளர் திரேஸ்புரம் மீராசா நன்றி கூறினார்.காயல்பட்டினம் நகர செயலாளர் அபூசாலிஹ் பிரார்த்தனை நடத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com