கோவில்பட்டியில் அரசு ஓய்வூதியர்கள் சங்க ஆண்டு விழா-கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. பங்கேற்பு

கோவில்பட்டியில் நடைபெற்ற அரசு ஓய்வூதியர்கள் சங்க ஆண்டு விழாவில் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
விழாவில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பேசிய காட்சி.
விழாவில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பேசிய காட்சி.
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் அரசு ஓய்வூதியர்கள் சங்க 35-ம் ஆண்டு விழா நடைபெற்றது.

விழாவிற்கு அரசு ஓய்வூதியர்கள் சங்கத் தலைவர் அய்யலுசாமி தலைமை தாங்கினார். செயலர் கேசவன் ஆண்டறிக்கையையும், பொருளாளர் அய்யனார் வரவு, செலவு அறிக்கையையும் வாசித்தனர்.

கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார். விழாவில் 75 மற்றும் 80 வயது நிறைவடைந்த சங்க உறுப்பினர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. 

ஓய்வு பெற்ற தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் உதவி கோட்டப் பொறியாளர் கோபால்சாமி உள்பட சங்க உறுப்பினர்கள் திரளானோர் பேசினர்.பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,

 மருத்துவப்படி ரூ.1000 உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

விழாவில் சங்க செயற்குழு உறுப்பினர் சுப்புராம் வரவேற்றார். மாரிச்சாமி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com