தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் தேசிய பாதுகாப்பு வாரவிழா

தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணைஇயக்குனர் நிறைமதி தலைமை உறுதிமொழி எடுக்கப்பட்டது.
விழாவில் தூத்துக்குடி தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணைஇயக்குனர் நிறைமதி தலைமை  உறுதிமொழி எடுக்கப்பட
விழாவில் தூத்துக்குடி தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணைஇயக்குனர் நிறைமதி தலைமை உறுதிமொழி எடுக்கப்பட
Published on

முள்ளக்காடு:

51-வது தேசிய பாதுகாப்பு வார விழா தூத்துக்குடி ஸ்பிக் மற்றும் கிரீன்ஸ்டார் நிறுவனத்தில் கொண்டாடப்பட்டது.

விழாவில் தூத்துக்குடி தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணைஇயக்குனர் நிறைமதி தலைமையில் தொழிலாளர்கள் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தேசிய பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு துறை பொருட்காட்சியை ஸ்பிக்நகர் மண்டபத்தில் தூத்துக்குடி மாவட்ட தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் துறையின் இணைஇயக்குனரான நிறைமதி கொடியேற்றி தொடங்கி வைத்து பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்.

இவ்விழாவில் ஸ்பிக் நிறுவனத்தின் முழுநேர இயக்குனர் எஸ்.ஆர்.ராமகிருஷ்ணன், க்ரீன்ஸ்டார் நிறுவனத்தின் முழுநேர இயக்குனர் எஸ்.நாராயணன், ஸ்பிக் மற்றும் கிரீன்ஸ்டார் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com