தூத்துக்குடியில் மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்தும், சொத்து வரியை உயர்த்திய மாநில அரசை கண்டித்தும் மாநிலம் முழுவதும் மக்கள் நீதி மய்யம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியினரை படத்தில் காணலாம்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியினரை படத்தில் காணலாம்.
Published on

தூத்துக்குடி:

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்தும், சொத்து வரியை உயர்த்திய மாநில அரசை கண்டித்தும் மாநிலம் முழுவதும் மக்கள் நீதி மய்யம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

இதன்படி தூத்துக்குடியில் பழைய நகராட்சி அலுவலகம் முன்பாக சிலிண்டருக்கு இறுதி சடங்கு நடத்தியும், ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து சென்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர்கள் ஜவஹர், சேகர், ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட துணைச்செயலாளர் அக்பர், மாவட்ட பொருளாளர் பாலா, மண்டல வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ரமேஷ், நகர செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com