உடன்குடியில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் சீல்

உடன்குடி கீழபஜாரில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுடன் இணைந்த விநாயகர் கோவிலுக்கு சொந்தமான கடைகளில் வாடகை பாக்கி செலுத்தாத கடைக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்த காட்சி.
கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்த காட்சி.
Published on

உடன்குடி:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுடன் இணைந்த கண்டுகொண்ட விநாயகர் கோவில் உடன்குடி கீழபஜாரில் உள்ளது.

இந்த கோவிலுக்குப் பாத்தியப்பட்ட 11 கடைகள் உடன்குடி பஜார்பகுதியில் உள்ளது. இதில் ஒரு கடையின் உரிமையாளர் மட்டும் முறையாக வாடகை செலுத்தாமல் இருந்ததையடுத்து அறநிலையத்துறை சார்பில் வாடகை செலுத்தக்கோரி பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதற்கு பின்னரும் உரிய வாடகை செலுத்தப்படவில்லை. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி உத்தரவின்பேரில் கோவிலின் தக்காரும் செயல் அலுவலருமான ராமசுப்பிரமணியன் மற்றும் கோவில் பணியாளர்கள் அந்த கடைக்கு சீல் வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com