ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் சங்ககால வாழ்விட பகுதிகள் கண்டுபிடிப்பு

ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் நடந்து வரும் இடத்தில் சங்க கால வாழ்விடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் சங்க கால வாழ்விட பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டதை படத்தில் காணலாம்.
ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் சங்க கால வாழ்விட பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டதை படத்தில் காணலாம்.
Published on

செய்துங்கநல்லூர்:

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதற்காக முதல் கட்டமாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் அகழாய்வு பணிகள் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி தொடர்ந்து 7 மாத காலமாக நடந்து வருகிறது.

இந்த அகழாய்வு பணியில் 3 பகுதிகளில் 32 குழிகள் தோண்டப்பட்டுள்ளது. அந்த குழிகளில் இருந்து 3000 ஆண்டுகள் முதல் 2500 ஆண்டுகள் வரையிலான 62&க்கு மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் குடுவைகள், பானைகள், இரும்பு பொருட்கள், மணிகள் என ஏராளமான தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளது. மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அகழாய்வு பணியில் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த 2 நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அலெக்சாண்டரி ரியா அகழாய்வு செய்த பகுதிக்கு அருகில் தோண்டப்பட்ட குழியில் மிகப்பெரிய முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது. அந்த முதுமக்கள் தாழியில் இருந்து நெல் உமிகள் கண்டு-பிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த முதுமக்கள் தாழியை சுற்றி ஏராளமான பானைகள் மற்றும் வாள் போன்ற இரும்பு பொருளும் இருந்தது.

இந்த நிலையில் அகழாய்வு பணிகள் நடந்து வரும் இடத்தில் சங்க கால வாழ்விடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் பானைகள், நூல்களை பிரிக்கும் தக்களி சாதனம், விலங்கின் எலும்புகள் மற்றும் கரித்துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஆய்வாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com