சாத்தான்குளம் அழகிய கூத்தர் கோவிலில் சதுர்த்தசி விழா

தூத்துக்குடி மாவட்டம் கட்டாரிமங்கலம் அருள்தரும் சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ அழகியகூத்தர் கோவிலில் மாசி சதுர்த்தசி விழா நடைபெற்றது.
விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சுவாமி.
விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சுவாமி.
Published on

சாத்தான்குளம்:

சாத்தான்குளம்  அருகே உள்ள நடராஜரின் விக்ரக தலமாக விளங்கும்  கட்டாரி மங்கலம் அருள்தரும் சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ அழகியகூத்தர் கோவிலில் மாசி சதுர்த்தசியையொட்டி நடராஜர் அபிஷேகம் நடைபெற்றது. 

இதையொட்டி நடராஜருக்கு பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள்,  தொடர்ந்து நடராஜருக்கு சிறப்பு அலங்கார தீபராதனை,  பூஜை நடைபெற்றது.  

இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

 பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com