புதிய வழித்தட பஸ் வசதியை அப்துல்வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

வண்ணார்பேட்டையில் இருந்து நாரணம்மாள்புரத்திற்கு புதிய வழித்தடத்தில் பஸ் வசதியை அப்துல்வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
தண்ணீர் பந்தலை திறந்து வைத்து அப்துல் வகாப் எம்.எல்.ஏ.   தர்பூசணி வழங்கினார்.
தண்ணீர் பந்தலை திறந்து வைத்து அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தர்பூசணி வழங்கினார்.
Published on

நெல்லை:

நெல்லை வண்ணார்பேட்டையில் இருந்து மணிமூர்த்தீஸ்வரம், எட்டெழுத்து பெருமாள் கோவில், குறிச்சிகுளம் வழியாக நாரணம்மாள்புரத்திற்கு புதிய வழித்தடத்தில் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து புதிய வழித்தடத்தில் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கான தொடக்க விழா வண்ணார்-பேட்டையில் இன்று நடைபெற்றது. 

இதில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய வழித்தடத்திற்கு பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தொ.மு.ச. தர்மர், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிப்பாண்டியன், நெல்லை அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் சசிகுமார், உதவி மேலாளர்கள் பூல்ராஜ், சங்கர நாராயணன், கிளை மேலாளர் வெங்கடேஷ் ஆகி-யோர் கலந்து கொண்டனர்.

புதிய வழித்தட பஸ்கள் தினமும் காலை, மாலை இரு நேரங்களில் இயக்கப்படுகிறது. அப்போது மணிமூர்த்தீஸ்வரம், சேந்திமங்கலம் வழியாக நாரணம்மாள்புரம் சென்று பின்னர் தாழையூத்து புதுநகர் வழியாக நெல்லை வந்தடைகிறது.

தொடர்ந்து பாளை சமாதானபுரம் பகுதியில் மாநகர சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் கமாலுதீன், மத்திய மாவட்ட சிறுபான்மை பிரிவின் துணை அமைப்பாளர் வீரப்பா ஏற்பாட்டில் தண்ணீர் பந்தலை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

இதில் பகுதி செயலாளர் அண்டன் செல்லத்துரை, மூழிகுளம் பிரபு, ஐ.டி. பிரிவு காசிமணி, செந்தில் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com