

தூத்துக்குடி:
முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தி.மு.க.வினர் உற்சாகமாக கொண்டாடினர்.
ஆங்காங்கே ஒலிபெருக்கி மூலம் கட்சி கொள்கை விளக்கி பாடலை ஒளிபரப்பி பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு களை வழங்கினர்.
தூத்துக்குடியில் வார்டுகள் தோறும் கேக் வெட்டியும் இனிப்புகளின் கொண்டாடப்பட்டது. முதியோர் இல்லங்கள் ஆதரவற்றோர் இல்லங் களிலும் உணவும் வழங்கப் பட்டது.
தொடர்ந்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கி 8 ஆண் குழந்தைகள் மற்றும் 9 பெண் குழந்தைகள் என மொத்தம் 17 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, நகர செயலாளர் ஆனந்த சேகரன், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் நேரு, துணை முதல்வர் கலைவாணி, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி மற்றும் டாக்டர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.