மணப்பாடு கடலில் ஆமைக்குஞ்சுகளை விட்ட வனத்துறையினர்

அரியவகையில் காணப்படும் ஆமைக்குஞ்சுகளை வனத்துறையினர் மணப்பாடு கடற்கரையில் விட்டனர்.
மணப்பாடு கடலில் ஆமைக்குட்டிகளை விட்ட வனத்துறையினர்.
மணப்பாடு கடலில் ஆமைக்குட்டிகளை விட்ட வனத்துறையினர்.
Published on

உடன்குடி:

டைனோசர்கள் காலத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் அரிய வகை ஆலிவ் ரிட்லி என்ற அரிய வகைஆமைகள் இனப்பெருக்கத்திற்காக தமிழக கடல் பகுதிகளை நாடி வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மணப்பாடு, பெரியதாழைகடல் பகுதிகளில் மட்டுமேஇந்த ஆமைகளின் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற தட்பவெப்ப சூழ்நிலை நிலவுகிறது.

இப்பகுதிகளில் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட வன அலுவலர் ஆகியோர் கடந்த ஜனவரி-29, மற்றும் பிப்ரவரி-4 ஆகிய தேதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது இந்த அரிய வகை ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக ஈடுகின்ற முட்டைகளை பாதுகாப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கடலோரத்தில் நடைப்பயிற்சியும் மேற்கொண்டனர்.

இதையடுத்து நேற்று 98ஆலிவ் ரிட்லி ஆமைக்குஞ்சுகள் மணப்பாடு கடலில் பாதுகாப்பாக விடப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com