ஆதிநாதர் ஆழ்வார் கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம்

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் பங்குனி தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
தேரோட்டம் நடைபெற்றபோது எடுத்தபடம்.
தேரோட்டம் நடைபெற்றபோது எடுத்தபடம்.
Published on

தென்திருப்பேரை:

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நவதிருப்பதி தலங்களில் 9-வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 7-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.

9-ந் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. 13-ந்தேதி கருடசேவை நிகழ்ச்சியில் கருட வாகனத்தில் பொலிந்து நின்ற பிரானும், அன்ன வாகனத்தில் நம்மாழ்வாரும் பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்தனர்.

திருவிழா நாட்களில் காலை, மாலை இரு வேளை யும் பொலிந்து நின்ற பிரான் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 17-ந்தேதியான இன்று காலை 8 மணிக்கு தேரோட்டம் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து மதியம் நிலையை அடைந்தது.

பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா... என கோஷம் எழுப்பி தேரை இழுத்து வந்தனர். தேரோட்டத்தில் ஆழ்வார் திருநகரி எம்பெரு மான் ஜீயர், சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை நிர்வாகிகள், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 18-ந்தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேஷ் தலைமையில் ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சப்-இன்ஸ் பெக்டர் செல்வன் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

மேலும் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்புதுறை அதிகாரி இசக்கி தலைமையில் தீயணைப்பு துறையினரும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கோவல மணிகண்டன், செயல் அலுவலர் அஜித் மற்றும் நிர்வாகத்தினர், காரிமாறன் கலை காப்பகத்தினர் செய்து இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com