புதுவாழ்வு சங்கம் சார்பில் நாலுமாவடி ஊராட்சியில் பேவர் பிளாக் சாலை பணிக்கு ரூ.4 லட்சம் உதவி

புதுவாழ்வு சங்கம் சார்பில் நாலுமாவடி ஊராட்சியில் பேவர் பிளாக் சாலை பணிகளுக்கு ரூ.4 லட்சம் உதவி வழங்கப்பட்டது.
புதுவாழ்வு சங்கம் சார்பில் ரூ.4 லட்சத்திற்கான காசோலையை ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகரிடம் வழங்கிய காட்சி.
புதுவாழ்வு சங்கம் சார்பில் ரூ.4 லட்சத்திற்கான காசோலையை ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகரிடம் வழங்கிய காட்சி.
Published on

தென்திருப்பேரை:

தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் சபையின் புதுவாழ்வு சங்கம் மூலமாக நாலுமாவடி ஊராட்சி புதுக்கிராமத்தில் உள்ள தெருக்களில் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு மக்கள் பங்களிப்பு தொகை ரூ.4 லட்சத்தை நாலுமாவடி புதுவாழ்வு சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது. 

அதனை சங்க நிர்வாகிகள் மருதநாயகம், எட்வின், சாந்தகுமார் ஆகியோர் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகரிடம் வழங்கினர். 

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய பொறியாளர் வெள்ளபாண்டியன் மற்றும் ஆழ்வை மேற்கு ஒன்றிய தி.மு.க. துணைச் செயலாளர் சிவசுப்பிரமணியன், மளவை ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com