ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருவிளக்கு பூஜை

ஆடி கிருத்திகையை முன்னிட்டு காலை 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானை அம்மனுடன் தங்கத்தேரில் எழுந்தருளி கிரி வீதியுலா வந்தார்.
ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்த போது எடுத்த படம்.
ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்த போது எடுத்த படம்.
Published on

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முக்கிய விசேஷ நாட்களில் ஒன்றானது ஆடி கிருத்திகை வைபவம் ஆகும். இந்நாளில் பக்தர்கள் விரதமிருந்து சுவாமியை வழிபடுவது வழக்கமாகும். திருச்செந்தூரில் ஆடிகிருத்திகையை முன்னிட்டு, நேற்று கோவில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 விஸ்வரூபதரிசனம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

ஆடி கிருத்திகையை முன்னிட்டு காலை 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மாலையில் 108 மகாதேவர் சன்னதி முன்பு திருவிளக்கு பூஜையும் நடைபெற்று, சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானை அம்மனுடன் தங்கத்தேரில் எழுந்தருளி கிரி வீதியுலா வந்தார். அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமியை வழிபட்டனர். மேலும் விரதமிருந்த பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தும், பாதயாத்திரையாக வந்தும் சுவாமியை வழிபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com