பெண்னை தாக்கிய வாலிபருக்கு வலைவீச்சு

திருவாரூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருவாரூர்:

திருவாரூர் அருகே பாலாக்குடியை சேர்ந்த சுந்தர்ராஜின் மனைவி புஷ்பம் (வயது 50). இவர் விவசாயம் செய்து வருகிறார்.

இவரது வீட்டிற்கு அருகில் குடியிருப்பவர் அஜித்குமார் (வயது 23). சில தினங்களுக்கு முன்பு அஜித்குமாரின் மாடு காணாமல் போயுள்ளது. இதனால் புஷ்பத்தின் வீட்டிற்கு சென்று அஜித்குமார் தனது மாட்டைக் காணவில்லை என்று தேடியுள்ளார்.

காணாமல்போன மாட்டை ஏன் எனது வீட்டில் வந்து தேடுகிறாய் என புஷ்பம் தகராறு செய்து அனுப்பியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த அஜித்குமார் சம்பவத்தன்று நள்ளிரவில் புஷ்பத்தின் வீட்டிற்குள் நுழைந்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புஷ்பம் கொரடாச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com