

மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் கால்நடை பராமரிப்பு துறை மற்றும் மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் நீடாமங்கலம் ஒன்றியம் நாவல்பூண்டி மற்றும் மன்னார்குடி ஒன்றியம் மூவாநல்லூர் ஆகிய கிராமங்களில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதற்கு கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் ஐ.தனபாலன், உதவி இயக்குனர் டாக்டர் டி.ராமலிங்கம் ஆகியோர் தலைமை தாங்கினர். கால்நடைகளுக்கு ரோட்டரி மாவட்ட கால்நடை மருத்துவ முகாம் தலைவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன் தடுப்பூசி செலுத்தினார்.
சிறந்த கால்நடை மற்றும் கன்றுகள் வளர்த்தவர்களுக்கு மண்டல இணை இயக்குனர் தனபாலன் பரிசுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் டாக்டர் சி.குருசாமி, பொருளாளர் ஹரிரவி, டாக்டர்கள் ஜே. ஜெயபாலன், ஏ.கார்த்திக், ஊராட்சி மன்ற தலைவர்கள் ரவி, ரஷ்யா அன்பழகன், துணைத்தலைவர்கள் அனிதா சரவணன், கனகவல்லிகருணாகரன், கால்நடை ஆய்வாளர்கள் மாலதி, மணிகண்டன், குருநாதன், கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி உறுப்பினர்கள் ஆசிர்வாதம், வீரையன், உதயவாணன், உதவியாளர்கள் சண்முகராஜன், குமுதவல்லி, மோகன், பாரதிமோகன், ஓட்டுநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் கால்நடைகளுக்கு கருவூட்டல் மற்றும் சினை பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சை, கன்றுகள், ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய்க்கு எதிரான தடுப்பூசி, கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு வகையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதன் மூலம் 762 கால்நடைகள் பயன்பெற்றன.