திருவாரூர் மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் எஸ்.காமராஜ் இல்ல திருமண விழா

தஞ்சாவூர் மஹாராஜா மஹாலில், வருகிற 6-ந்தேதி நடக்கவிருக்கும் திருவாரூர் மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் எஸ்.காமராஜ் இல்ல திருமண விழாவினை அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார்.
மணமகளின் பெற்றோர் எஸ்.காமராஜ்-விஜயலட்சுமி காமராஜ், மணமக்கள் கே.தரணி-எஸ்.துளசிஅய்யா
மணமகளின் பெற்றோர் எஸ்.காமராஜ்-விஜயலட்சுமி காமராஜ், மணமக்கள் கே.தரணி-எஸ்.துளசிஅய்யா
Published on

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்ட அ.ம.மு.க செயலாளரும் மன்னார்குடி தரணி குழுமங்களின் தலைவருமான 

எஸ்.காமராஜ், மன்னார்குடி தரணி குழுமம் மேலாண் இயக்குனர் விஜயலட்சுமி காமராஜ் தம்பதியரின் மகள் டாக்டர் கே.தரணிக்கும் தஞ்சை மாவட்டம் ஒக்கநாடு கீழையூர் மேலத்தெருவை சேர்ந்த சாம்பமூர்த்தி சேந்த முடையார்-ராஜேஸ்வரி தம்பதியின் மகன் டாக்டர் எஸ்.துளசிஅய்யாவுக்கும் பெரியோர்களால் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டு வருகிற 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் 

தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மஹாராஜா மஹாலில் திருமணம் நடைபெற உள்ளது.

முன்னதாக நாளை மாலை 6 மணியளவில் தஞ்சாவூர் மஹாராஜா மஹாலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்தத் திருமணத்தை அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார்.

இதில் அ.ம.மு.க. மாநில, மாவட்ட நிர்வாகிகள், அனைத்துக் கட்சி நிர்வாகிகள், தொழில திபர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர். 

திருமண விழாவில் நாதஸ்வர இசை செல்வம் கலை சக்கரவர்த்தி உ டாக்டர் மணிசங்கரின் மங்கல லய நாதம், சிறப்பு தவில் தேசிய விருது பெற்ற அமிர்தவர்ஷினி ஆகியோரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை மணமகளின் பெற்றோர் எஸ்.-காமராஜ், விஜயலட்சுமி காமராஜ் மற்றும் மணமகளின் சகோதர சகோதரிகளான கே.ஜெயப்பிரியா, கே.ஜெயேந்திரன், தரணி பள்ளி நிர்வாகி இளையராஜா, தரணி குழுமம் ஊழியர்கள், எட அன்ன வாசலை சேர்ந்த ரவி ராஜாளியார் மிராசு, வாசுகி ரவி, அசோகன், சாரதா அசோகன், பூமயில் மாரியப்பன், மணியம்மாள் சாமிக்கண்ணு மற்றும் மணமகன் பெற்றோர் சாம்பமூர்த்தி, ராஜேஸ்வரி மற்றும் உறவினர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com