சித்தப்பாவை கத்தியால் குத்தி கொன்ற வாலிபர்

திருத்துறைப்பூண்டி அருகே முன்விரோதத்தில் சித்தப்பாவை கத்தியால் குத்தி கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்த சதீஷ்-கொலையுண்ட முருகேசன்
கொலை செய்த சதீஷ்-கொலையுண்ட முருகேசன்
Published on

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி உப்புக் கடலை தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது48). பெயிண்டர்.  இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். 

இந்நிலையில் இன்று காலை முருகேசன் வேதாரண்யம் சாலை பகுதியில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அண்ணா நகரை சேர்ந்த அவரது அண்ணன் மகனான பெயிண்டர் சதீஷ்(32) என்பவர் திடீரென  மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகேசனின் கழுத்தில் குத்தியுள்ளார் இதில் சம்பவ இடத்திலேயே முருகேசன் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரமேசை கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com