போலீஸ்காரரை பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது

நன்னிலம் அருகே போலீஸ்காரரை பீர் பாட்டிலால் தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மேனாங்குடியில் உள்ள சீத்தளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது. தீமிதி திருவிழா முடிந்தவுடன் ஆர்கெஸ்ட்ரா நடைபெற்றது. இந்த விழாவில் அசம் பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பேரளம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது இளைஞர்கள் சிலர் மது போதையில் பாடலை கேட்டு ஒருவருக்கொருவர் தள்ளிவிட்டு நடனமாடினர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த தலைமை காவலர் குமரவேல் இளைஞர்களை தரையில் அமர்ந்து பாருங்கள் என கூறியுள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த பாலூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (28) பீர் பாட்டிலை எடுத்து காவலர் குமரவேல் தலையில் அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த குமரவேலை காவல்துறையினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com