மனைவியை கம்பியால் தாக்கி கொன்ற கணவன்

வலங்கைமான் அருகே சொத்து பிரச்சினையில் மனைவியை கம்பியால் தாக்கி கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நீடாமங்கலம்:

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள விடியல் கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர்( வயது 54). இவரது மனைவி சிவகலா (47). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.சம்பவத்தன்று கணவன்- மனைவிக்கிடையே சொத்து சம்பந்தமான பிரச்சினை ஏற்பட்டது.

இதனால் சிவகலா கோபித்து கொண்டு அவரது தாய் வீட்டிற்கு செல்ல முயன்றார். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி சங்கர் ஆத்திரம் அடைந்து சிவகலாவை இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் மயக்கம் அடைந்த சிவகலாவை கயிரை கொண்டு கழுத்தை இறுக்கி தூக்கில் தொங்க விட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் தலைமையில் குடவாசல் இன்ஸ்பெக்டர் (பொ) கருணாநிதி, வலங்கைமான் இன்ஸ்பெக்டர் விஜயா மற்றும் சப்-இன்ஸ்ராபெக்டர் ராஜேஷ்குமார்  ஆகியோர்  சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சங்கரை கைது செய்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com