மழலையர் பள்ளியில் ஆய்வு

நன்னிலம் மழலையர் பள்ளியில் ஆய்வு நடந்தது
பள்ளியில் ஆய்வு நடந்தது.
பள்ளியில் ஆய்வு நடந்தது.
Published on

நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஒன்றியத்திற்குட்பட்ட, 48 ஊராட்சிகள், இரண்டு பேரூராட்சிகளில் இயங்கி வரும் அரசு மற்றும் தனியார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகளின் கட்டிடங்களின் உறுதித்தன்மை, கழிப்பறைகளில் உறுதித்தன்மை, கழிப்பறைகளின் வசதி ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வில் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, கட்டிடங்களின் தன்மையினை, மூன்று குழுக்களாக ஆய்வு மேற்கொண்டனர். 

வட்டார வள மைய மேற்பார்வையாளர் நடேஷ்துரை தலைமையில் ஒரு குழுவும், ஆசிரியர் ஸ்டாலின் தலைமையில் ஒரு குழுவும், வட்டார கல்வி அலுவலர் முருக பாஸ்கர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டு, பொறியாளர்கள் குமார், சாந்தி, மணிமேகலை ஆகியோர் இடங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com