மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.2 லட்சம் திருட்டு

நன்னிலம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.2 லட்சத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
பதிவான சி.சி.டி.வி காட்சிகள்
பதிவான சி.சி.டி.வி காட்சிகள்
Published on

நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பூந்தோட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரங்கசாமி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நன்னிலத்தில் உள்ள ஒரு வங்கியில் இருந்து ரூ.2 லட்சம் எடுத்துக் கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் பூந்தோட்டம் நோக்கி சென்றுள்ளார்.

அப்போது பூந்தோட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வாகனத்தை நிறுத்தி உள்ளே சென்ற போது அவரை நோட்டமிட்டு பின்னே வந்த மர்ம நபர்கள் இருவர் அவரது மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.2 லட்சத்தை திருடி சென்றனர். இது குறித்து ரங்கசாமி நன்னிலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதையடுத்து போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சில மர்ம நபர்கள் பணத்தை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் அந்த மர்ம நபர்கள் யார்? என விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com