பொதுமக்கள் சாலை மறியல்

திருவாரூரில் நகராட்சி சார்பில் சாலை அமைக்கப்பட்டதாக வைக்கப்பட்ட பேனரால் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
Published on

திருவாரூர்:

திருவாரூர் நகராட்சி பகுதிக்குட்பட்ட பகுதியான அழகிரி காலனி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில் அந்த பகுதியில் 413.93 லட்சம் செலவில் சாலை அமைக்கப்பட்டதாக திடீரென நகராட்சி சார்பில் பேனர் வைக்கபட்டது. 

பணிகள் நடைபெறாமல் பேனர் வைத்ததை கண்டித்து அழகிரி காலனி பொதுமக்கள் திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மற்றும் பாதாள சாக்கடை உள்ளிட்ட எந்த வித அடிப்படை வசதியும் செய்யாமல் மேலும் சாலை போடாமல் சாலை அமைக்கப்பட்டதாக பேனர் வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். 

தகவலறிந்து வந்த காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டு கலைந்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com