கைலாசநாதர் கோவில் குடமுழுக்கு விழா

நன்னிலம் அருகே கைலாசநாதர் கோவிலில் குடமுழுக்கு விழா நடந்தது.
கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேகம் நடந்தது.
Published on

நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள மாப்பிள்ளைகுப்பம் கைலாசநாதர் உடனுறை காமாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

கடந்த 25-ந் தேதி தொடங்கிய யாக பூஜை, நான்கு கால யாக பூஜை பெற்று நேற்று காலை மங்கள வாத்தியம் இசைக்க, புனிதநீர் அடங்கிய குடங்கள், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கலசங்களில் ஊற்றப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். வெளியூர்களிலிருந்து சிவகணம் எனும் வாத்தியக் கருவிகளை இசைக்கும் சிவனடியார்கள் வந்திருந்து சிவகண வாக்கியங்களை வாசித்தார்கள்.

மேலும் மாப்பிள்ளைகுப்பம் முஸ்லிம்கள் சார்பில் பக்தர்களை வரவேற்று பதாகை அமைக்கப்பட்டது மட்டுமல்லாமல் நீர்மோர் வழங்கி மத ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com