ரூ.5 லட்சத்தில் வளர்ச்சித்திட்டப்பணிகள்

வலங்கைமான் ஊராட்சியில் ரூ.5 லட்சத்தில் வளர்ச்சித்திட்டப்பணிகள் ஒன்றியக்குழு கூட்டத்தில் தகவல் தெரிவித்தனர்.
வலங்கைமான் ஒன்றியக்குழு கூட்டத்தில், தலைவர் சங்கர் பேசினார்
வலங்கைமான் ஒன்றியக்குழு கூட்டத்தில், தலைவர் சங்கர் பேசினார்
Published on

நீடாமங்கலம்:

வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் சங்கர் தலைமையில் நடந்தது.

 கூட்டத்தில் துணை தலைவர் வாசுதேவன்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைச்செல்வன்,பொற்செல்வி மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் தலைவர் சங்கர் பேசுகையில், 

ஒன்றிய குழு உறுப்பினர்கள் தங்களது பகுதியில் திட்டபணிகளை மேற்கொள்ள ஒன்றிய பொது நிதியில் இருந்துதலா ஐந்து லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இதனை உறுப்பினர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வன் பேசுகையில், விரைவில் டெண்டர் விடப்பட உள்ளதால் உறுப்பினர்கள் ரூபாய் ஐந்து லட்சம் மதிப்பீட்டில் தங்களுக்கு தேவையான திட்டபணிகள் குறித்து அலுவலகத்தில் தகவல் தெரிவிக்குமாறு கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com