மாற்றுதிறனாளி அலுவலகத்துக்கு பீரோ வழங்கல்

திருவாரூர் மாவட்ட மாற்றுதிறனாளி அலுவலகத்துக்கு மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் பீரோவை கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் வழங்கினார்.
மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் பீரோவை கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் ஒப்படைப்பு.
மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் பீரோவை கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் ஒப்படைப்பு.
Published on

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்ட மாற்றுதிறனாளிகள் அலுவலகத்துக்கு மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் பீரோ வழங்கும் விழா மற்றும் மிட்டவுன் ரோட்டரி மாவட்ட கால்நடை மருத்துவ முகாம் தலைவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன் எழுதிய கால்நடை காப்போம் கையேடு வெளியீடு என்ற இருபெரும் விழா நடைபெற்றது.

இதற்கு மாவட்ட மாற்றுதிறனாளி அலுவலர் புவனா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு ஆகியோர் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் வழங்கப்பட்ட பீரோவை மாற்றுதிறனாளி அலுவலகத்துக்கு கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் ஒப்படைத்தார். பின்னர் கால்நடை காப்போம் கையேட்டை வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மிட்டவுன் ரோட்டரி மாவட்ட கால்நடை மருத்துவ முகாம் தலைவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன், மிட்டவுண் ரோட்டரி சங்க தலைவர் சி.குருசாமி, மாவட்ட பொறுப்பாளர் எம்.நடராஜன், பொறுப்பாளர்கள் பி.அன்பழகன், வி.கோபாலகிருஷ்ணன், என்.சாந்தகுமார், ஹரிரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட சதுரங்க கழக தலைவர் பாலகுணசேகரன் செய்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com