இருளில் தத்தளித்த கிராமத்தில் மின்இணைப்பை சரிசெய்த அதிகாரிகள்

வலங்கைமான் அருகே அடிக்கடி இருளில் தத்தளித்த கிராமத்தில் மின்இணைப்பை அதிகாரிகள் சரிசெய்தனர்.
மின்கம்பத்தில் ஏறி மின்இணைப்பை சரி செய்யும் ஊழியர்.
மின்கம்பத்தில் ஏறி மின்இணைப்பை சரி செய்யும் ஊழியர்.
Published on

நீடாமங்கலம்:

வலங்கைமான் அருகே உள்ள கோவில்பத்து கிராம மக்கள் கடந்த ஒரு வருடமாக சரிவர மின்சாரம் கிடைக்காததாலும்,பல முறை மின் வாரியத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர். இதனால் பொதுமக்கள் அடிக்கடி இருளில் தத்தளித்தனர்.

சம்பவத்தன்று மின்தடை செய்யப்பட்ட நேரத்தில் 50 வயதுடைய பெண் ஒருவரை தேள் கடித்தது. 

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள்  மின் வாரிய அலுவலத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது தொடர்பான செய்தி மாலைமலர் நாளிதழில் வெளியானது.  அதன் எதிரொலியாக மின் வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை சரி செய்தனர்.இதனால் தற்போது மின்சாரம் சரியான முறையில் இருப்பதாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com