மூதாட்டியை தாக்கி நகை பறித்த கொள்ளையன் கைது

நன்னிலம் அருகே மூதாட்டியை தாக்கி நகை பறித்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on

நன்னிலம்:

நன்னிலம் அடுத்துள்ள மாப்பிள்ளைகுப்பத்தை சேர்ந்தவர் மலர் (வயது 60). இவர் வீட்டின் கீழ் தளத்தில் தனியாக வசித்து வருகிறார்.

இவரது மகன் செந்தில்குமார் மேல்மாடியில் வசிக்கிறார். இந்த நிலையில் வீடு புகுந்த மர்ம நபர்கள் மலரை இரும்பு ராடால் தாக்கி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.

இந்த தாக்குதலில் காயம் அடைந்த மூதாட்டி தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்த புகாரின் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுகுணா மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் குடவாசல் பகுதியை சேர்ந்த வினோத் (36) என்பவர் மூதாட்டியை தாக்கி நகை பறித்தது தெரியவந்தது.

இதையடுத்து வினோத்தை போலீசார் கைது செய்தனர். சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளியை கண்டுபிடித்த போலீசாரை உயர் அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டின

X

Maalai Malar
www.maalaimalar.com