கட்டமைப்பு பணிகளை- அமைச்சர் ஆய்வு

திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாலயக் குளக்கரை கட்டமைப்பு பணிகளை- அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
கமலாலயக் குளத்தை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
கமலாலயக் குளத்தை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
Published on

திருவாரூர்:

திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான கமலாலயக் குளத்தின் கரைகள் கடந்த மாதம் பெய்த கனமழையால் இடிந்து விழுந்தன. 

உடனடியாக முதலமைச்சரின் அறிவுறுத்தல் படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் வந்து சேதமடைந்த கமலாலயக் குளத்தின் கரைகளை பார்வையிட்டு கரையை பலப்படுத்த பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

தொடர்ந்து தற்போது விறுவிறுப்பாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அமைச்சர் எ.வ.வேலு கமலாலய குளத்தின் கரைகளை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்தார். 

அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  

இந்த ஆய்வில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சேகர் கலியபெருமாள், திருவாரூர் நகர செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com