ஏரியில் தவறி விழுந்து பெண் சாவு

துணி துவைக்க சென்றபோது பரிதாபம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
ஏரியில் தவறி விழுந்து பெண் சாவு
Published on

ஆரணி:

ஆரணி அருகே இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த கபூர், டீக்கடையில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஷர்மிளா (வயது 45). இவர் வீட்டின் எதிரே உள்ள இரும்பேடு பெரிய ஏரியில் துணி துவைக்க சென்றார். அப்போது ஏரியில் இறங்கியபோது தவறி உள்ளே விழுந்தார்.

அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக வந்து அவரை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கிவிட்டார். பின்னர் ஆரணி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி ஷர்மிளாவை பிணமாக மீட்டனர்.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக ஷர்மிளாவின் உடல் ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com