முகமூடி அணிந்து வீட்டில் கொள்ளையடிக்க முயற்சி

2 பேரை தாக்கி கும்பல் தப்பி ஓட்டம்கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டது
கொள்ளையர்கள் விட்டு சென்ற முகமூடி. கும்பல் தாக்கியதில் காயமடைந்தவர்கள்.
கொள்ளையர்கள் விட்டு சென்ற முகமூடி. கும்பல் தாக்கியதில் காயமடைந்தவர்கள்.
Published on

வந்தவாசி:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி வடிவுக்கரசி. மகன் வேல்முருகன் உள்ளிட்ட 5 பேர் குடும்பத்துடன் வீட்டில் தூங்கி நேற்று இரவு தூங்கி கொண்டிருந்தனர்.

கொள்ளை கும்பல்

இந்த நிலையில் இன்று அதிகாலை 5 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்து ரமேஷ் வீட்டினுள் கொள்ளையடிக்க புகுந்தனர்.

வீட்டில் சத்தம் கேட்ட வேல்முருகன் எழுந்து பார்த்தார். அப்போது பீரோவின் அருகே மர்ம கும்பல் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கும்பலை மடக்கி பிடிக்க வேல்முருகன் முயன்றார். மர்ம கும்பல் கட்டையால் வேல்முருகனின் தலையில் அடித்தனர்.

இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. வலி தாங்க முடியாமல் கத்தி கூச்சலிட்டார். அப்போது எதிர் வீட்டை சேர்ந்த ரங்கநாதன் என்பவர் முகமூடி கொள்ளையர்களை பிடிக்க முயன்றார். அவரையும் மர்மகும்பல் தாக்கி விட்டு தப்பிசென்றனர்.

இதில் ரங்கநாதனுக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

படுகாயம் அடைந்த வேல்முருகன் மற்றும் ரங்கநாதனை அருகே இருந்தவர்கள் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

தகவல் அறிந்த கீழ்கொடுங்காலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். திருவண்ணாமலை கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சிறிது தூரம் சென்று யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து பொதுமக்களை தாக்கி விட்டு தப்பி சென்ற கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com