கோவில்களில் கும்பாபிஷேகம்

பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்
கோவில்களில் கும்பாபிஷேகம்
Published on

வந்தவாசி:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ செல்லியம்மன் மாரியம்மன் மற்றும் எட்டியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

சிவாச்சாரியார்கள் கலசங்களை தலையில் சுமந்தவாறு கோவில் சுற்றி வலம் வந்து கோபுர கலசத்திற்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் அந்த புனித நீரானது பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது.

இந்த சிறப்பு மிக்க மகா கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com