பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

தாயார் கண்டித்ததால் விரக்தி போலீசார் விசாரணை
பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை
Published on

செங்கம்:

மேல் செங்கம் அடுத்த மேல் பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முத்தம்மா. கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் ஐஸ்வர்யா (வயது 13). அதே பகுதியில் உள்ள அரசுபெண்கள் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று ஐஸ்வர்யா வீட்டில் உள்ள வேலைகள் செய்யாமல் இருந்தார். தாயார் முத்தம்மா ஐஸ்வர்யாவை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஐஸ்வர்யா வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனைக் கண்ட தாயார் முத்தம்மா அதிர்ச்சி அடைந்து மேல் செங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஐஸ்வர்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com