வனப்பகுதியில் ஆண் பிணம் மீட்பு

கொலையா? போலீசார் விசாரணை கழுத்தில் பச்சை துண்டு அணிந்திருந்தார்
வனப்பகுதியில் ஆண் பிணம் மீட்பு
Published on

வாணாபுரம்:

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தென்கரும்பலூர் ஊராட்சிக்குட்பட்ட பூ மலைகாடு வனப்பகுதியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக அப்பகுதியில் விறகு வெட்ட சென்றவர்கள் வாணாபுரம் போலீசுக்கு நேற்று தகவல் தெரிவித்தனர்.

அதனடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று வனப்பகுதியில் உள்ள உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எதற்காக வனப்பகுதிக்கு வந்தார்? வனவிலங்குகளை வேட்டையாட வந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்தவர் ட்ரவுசர், டிசர்ட் அணிந்திருந்தார். அவர் வைத்திருந்த பையில் செல் போன், தலையில் பொருத்தும் சிறிய ரக லைட் மற்றும் கழுத்தில் பச்சை துண்டு அணிந்திருந்தார்.

இதனால் அவர் முயல் வேட்டைக்கு சென்ற போது, உடன் வந்தவர் களுடன் தகராறு ஏற் பட்டு அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என் பது உள்ளிட்ட கோணங்க ளில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேத பரி சோதனை அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத் தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com